கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் முதலாவது நாசி வழித் தடுப்பு மருந்தானது உயிரித் தொழில்நுட்பத் துறையின் 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு வேண்டிய அனுமதியினைப் பெற்றுள்ளது.
இந்தத் தடுப்பு மருந்தானது பாரத் பயோடெக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது ஆகும்.
இந்தத் தடுப்பு மருந்தானது இந்தியாவில் மனித மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் படும் இது போன்ற முதல் வகை கோவிட் – 19 தடுப்பு மருந்தாகும்.
குறிப்பு
பாரத் பயோடெக் நிறுவனமானது BBV154 எனப்படும் முதலாவது நாசி வழித் தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ளது.
இது ஒரு புதிய அடினோவைரஸ் நோய்க் கடத்தி ஆகும்.
இந்த மருந்து கோவிட் – 19 தொற்றிற்கு எதிராக வேண்டி நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு உள்நாசி தடுப்பு மருந்தாகும்.