இந்திய – மங்கோலிய நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான நாடோடி யானையின் 14வது பதிப்பு அக்டோபர் 05-ம் தேதி தொடங்கியது.
இப்பயிற்சி இமாச்சலப் பிரதேசத்தில் பாக்லோ என்னுமிடத்தில் அக்டோபர் 05-ம்தேதி முதல் 18-ம் தேதி வரை நடத்தப்படும்.
இந்திய இராணுவம் ரஜபுத்னா ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த ஒரு படைப் பிரிவால் பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டிருக்கின்றது.
நாடோடி யானை – XIV என்பது ஐக்கிய நாடுகளின் ஆணைக்கிணங்க கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் படைகளுக்குப் பயிற்சி அளித்திடுவதில் நோக்கம் கொண்டிருக்கின்றது.