உலக சுகாதார அமைப்பானது, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) 2021 ஆம் ஆண்டில் 3.5 மில்லியன் இறப்புகள் பதிவாகும் என்பதுடன் உலகளவில் பதிவாகும் மரணத்திற்குகான நான்காவது முக்கிய காரணமாக அமையும் என்று கூறுகிறது.
நிரந்தர நுரையீரல் சேதத்தால் ஏற்படுகின்ற COPD ஆனது சுவாசிக்கும் செயல் முறையை கடினமாக்கக் கூடிய நுரையீரல் நோயாகும்.
இதில் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி (காற்றுப்பாதைகளின் வீக்கம்) மற்றும் எம்பிஸிமா (காற்றுப் பைகளுக்கு சேதம்) என்ற இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.
இந்தப் பாதிப்பிற்கான முக்கியமான காரணங்களில் புகைபிடித்தல், உட்புறக் காற்று மாசுபாடு, இரசாயனப் புகை அல்லது தூசி பாதிப்பு மற்றும் அரிய மரபணுக் கோளாறுகள் ஆகியவை அடங்கும்.
இதன் அறிகுறிகளில் சளியுடன் கூடிய இருமல், மூச்சுத் திணறல், மூச்சிரைப்பு, மார்பு இறுக்கம் மற்றும் அடிக்கடி ஏற்படும் தொற்றுகள் ஆகியவை அடங்கும்.
COPD ஆனது, கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் (11%) அதிக பாதிப்பு கொண்டு உள்ளதுடன் (5.6%) இந்தியாவில் 37.6 மில்லியன் மக்களைப் பாதிக்கிறது.