கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) ஆகியவற்றிற்கான முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயல் திட்டத்தினை இந்தியா அறிமுகப்படுத்தியது.
இந்தச் செயல் திட்டமானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் தயாரிக்கப் பட்டது.
CCUS தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயலாக்கத்திற்கு வழிகாட்டுவதன் மூலம் 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் பருவநிலை இலக்கை ஆதரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மின்சாரம், சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற அசல் தொழிற்சாலைகளில் கார்பன் நீக்கத்தை ஆதரிப்பதற்காக CCUS சோதனை படுக்கைகளை DST உருவாக்கியுள்ளது.
தொழில்நுட்ப முன்னுரிமைகள், நிதியளிப்புப் பாதைகள், திறன் மிக்க மனிதவளம், பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் பகிரப்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றை இந்தச் செயல் திட்டம் வழிநடத்துகிறது.