TNPSC Thervupettagam

புதிய சமூக நோய் அறிக்கையிடல் அமைப்பு

December 8 , 2025 15 days 72 0
  • நோய்த் தொற்றுகள் குறித்த முன் எச்சரிக்கைகளை வழங்க தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் (NCDC) குடிமக்கள் சார்ந்த அறிக்கையிடல் முறையை அறிமுகப் படுத்தியது.
  • சுகாதார அமைச்சகம் மற்றும் NCDC வழங்கிய விரைவு துலங்கல் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அசாதாரண சுகாதார நிகழ்வுகள் குறித்து மக்கள் இதில் புகாரளிக்கலாம்.
  • ஒவ்வோர் அறிக்கையும் ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் (IDSP) கீழ் உள்ள மாவட்ட, மாநில மற்றும் தேசிய முகப்புப் பக்கங்களுக்கு உடனடியாக அனுப்பப் படும்.
  • பயனர் தரவைப் பாதுகாப்பதற்காக இந்த அமைப்பானது, பாதுகாப்பான அரசு சேவையகங்கள் மற்றும் இணைய வெளிப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பயன்படுத்துகிறது.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாடு தழுவிய அளவில் அறிமுகப் படுத்தப் பட்டதிலிருந்து சுமார் 100 சரிபார்க்கப்பட்ட அறிக்கைகள் மட்டுமே பதிவு செய்யப் பட்டிருந்தாலும், நோயாளிகள் சுகாதார மையங்களை அடைவதற்கு முன்னதாகவே தொற்றுக்களைக் கண்டறிவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்