TNPSC Thervupettagam

நிதி ஆயோக் சுகாதாரக் குறியீடு 2021

December 28 , 2021 1309 days 6139 0
  • நிதி ஆயோக் அமைப்பானது 2019-20 ஆம் ஆண்டிற்கான 4வது மாநில சுகாதாரக் குறியீட்டினை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று வெளியிட்டது.
  • "வளமான மாநிலங்கள், முன்னேறுகின்ற இந்தியா" என்ற தலைப்பிலான இந்த ஒரு அறிக்கையானது, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் சுகாதாரம் மற்றும் அவற்றின் ஒட்டு மொத்த நிலைகளில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் செயல் திறனின் அடிப்படையில் அவற்றைத் தரவரிசைப்படுத்துகிறது.
  • சுகாதாரக் குறியீட்டின் பெரிய மாநிலங்கள் பிரிவில்  கேரளா தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள அதே சமயம் உத்தரப் பிரதேசம் இதில் மிக மோசமான நிலையில் உள்ளது.
  • தமிழக மாநிலம் 72.42 மதிப்பெண்கள் பெற்று இதில் இரண்டாம் இடத்தில் உள்ளது
  • சுகாதாரக் குறியீட்டின் சிறிய மாநிலங்கள் பிரிவில் மிசோரம் முதலிடத்திலும், நாகாலாந்து கடைசி இடத்திலும் உள்ளது.
  • ஒன்றியப் பிரதேசங்களில், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகியவை முதலிடத்திலும், அந்தமான் & நிக்கோபார் கடைசி இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்