TNPSC Thervupettagam

நியாண்டர்தால் உற்பத்தி தளம் கண்டுபிடிப்பு

March 23 , 2026 4 days 32 0
  • நியூமார்க்-நோர்ட் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு, நியாண்டர்தால்கள் உணவு பதப்படுத்துதலில் ஒழுங்கமைக்கப்பட்ட முறைகளைக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது.
  • ஜெர்மனியில் அமைந்துள்ள இந்தத் தளம் சுமார் 1,25,000 ஆண்டுகளுக்கு முந்தையது.
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மஜ்ஜை மற்றும் கொழுப்பை எடுக்க முறையான அமைப்பில் உடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விலங்கு எலும்புகளைக் கண்டறிந்தனர்.
  • எலும்புகள் மேலும் நசுக்கப்பட்டு சூடுபடுத்தப் பட்டு கொழுப்பு / கிரீஸ் பெறப்பட்டது என்பதோடு இது திட்டமிடப்பட்ட மற்றும் மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட செயல் பாட்டைக் காட்டுகிறது.
  • நியாண்டர்தால்கள் மேம்பட்ட உயிர்வாழும் திறன்களையும் ஊட்டச்சத்து பற்றிய சரியான புரிதலையும் கொண்டிருந்தனர் என்பதை இது நிரூபிக்கிறது.
  • இந்தத் தளம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டதுடன் இது ஒரு சிறப்புப் பதப்படுத்தும் பகுதி அல்லது "தொழிற்சாலை" போல செயல்பட்டதைக் குறிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்