நிறுவனங்களின் சாதனைமிக்க புதுமைகள் மீதான அடல்தரவரிசை – 2021
December 31 , 2021 1297 days 540 0
ஒன்றியக் கல்வித் துறை அமைச்சகம் இந்த விருதுப் பட்டியலை வெளியிட்டது.
இதில் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் முதலிடத்தினைப் பெற்றது.
தொழில்நுட்பப் பிரிவில் இந்தியாவிலுள்ள மிகவும் புத்தாக்கம் மிக்க கல்வி நிறுவனம் என்ற பெயருடன் இது முதலிடத்தில் உள்ளது.
இதில் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது தொடர்ந்து 3வது ஆண்டாக இந்த விருதினைப் பெற்றது.
முதல் 10 இடங்களில் இடம்பெற்ற கல்வி நிறுவனங்கள்; மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், டெல்லியின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம், ரூர்க்கியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கான்பூரின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம், கரக்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியனவாகும்.
தொழில்நுட்பம் என்ற பிரிவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ‘கல்லூரிகள்/கல்வி நிறுவனங்கள் பிரிவில் புனேவில் உள்ள பொறியியல் கல்லூரி மற்றும் PSG தொழில் நுட்பக் கல்லூரி ஆகியன விருதுகளை வென்றன.
‘தொழில் நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள்‘ என்ற பிரிவில் டெல்லியின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் கோழிக்கோட்டிலுள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஆகியன விருதுகளை வென்றன.