TNPSC Thervupettagam

நிலக்கரி அமைச்சக விருது 2021-2022

August 24 , 2022 1086 days 540 0
  • இந்த விருதுகள், கடந்த ஆண்டில் அறிமுகப் படுத்தப் பட்டன.
  • பாதுகாப்பு, உற்பத்தி & உற்பத்தித் திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்று பிரிவுகளில் அவை வழங்கப்பட்டன.
  • தரம் மற்றும் பெருநிறுவன வளத் திட்டமிடல் செயலாக்கம் ஆகிய இரண்டு புதிய கூடுதல் பிரிவுகள் இந்த ஆண்டு சேர்க்கப் பட்டுள்ளன.
  • 'பாதுகாப்பு', 'உற்பத்தி & உற்பத்தித் திறன்' மற்றும் 'தரம்' ஆகிய மூன்று பிரிவுகளிலும் மகாநதி நிலக்கரி வயல் நிறுவனம் முதல் பரிசைப் பெற்றது.
  • சென்ட்ரல் நிலக்கரி வயல் லிமிடெட் நிறுவனமானது பாதுகாப்புப் பிரிவில் இரண்டாவது பரிசையும், நிலைத் தன்மை என்ற பிரிவில் மூன்றாவது பரிசினையும் பெற்றது.
  • வெஸ்டர்ன் நிலக்கரி வயல் (WCL) நிறுவனம் 'நிலைத் தன்மை' பிரிவில் முதல் பரிசைப் பெற்றது.
  • நார்தர்ன் நிலக்கரி வயல் 'பெரு நிறுவன வளத் திட்டமிடல் செயலாக்கம்' என்ற பிரிவில் முதல் பரிசைப் பெற்றது.
  • சென்ட்ரல் நிலக்கரி வயல் நிறுவனமானது 2007 ஆம் ஆண்டு முதல் முதலாம் வகை மினி ரத்னா நிறுவனமாகும்.
  • இது நிலக்கரித் துறையைக் கட்டுப்படுத்தும் நாட்டின் முதல் நிறுவனம் ஆகும்.
  • தொடக்கத்தில் இது ஐந்து துணை நிறுவனங்களைக் கொண்டிருந்தது.
  • அதே சமயம் கோல் இந்தியா லிமிடெட் தற்போது எட்டு துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்