மத்திய அரசானது ராஷ்ட்ரிய புரஸ்கார் தளத்தினை அறிமுகப்படுத்தியது.
வெளிப்படைத் தன்மை மற்றும் பொதுமக்களின் பங்களிப்பினை உறுதி செய்யச் செய்வதற்காக இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், முகமைகள் ஆகியவற்றில் வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் ஒரே தளத்தின் கீழ் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட பல்வேறு விருதுகளுக்கு தனி நபர்கள் / நிறுவனங்களைப் பரிந்துரைப்பதற்கு வேண்டி ஒவ்வொருக் குடிமகனுக்கும் அல்லது நிறுவனத்திற்கும் இந்தத் தளம் உதவுகிறது.
பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பத்ம விருதுகளும் 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன.