நீட் தேர்விற்கு எதிரான மசோதா - தமிழக சட்டசபை மீண்டும் நிறைவேற்றம்
February 10 , 2022 1279 days 655 0
தமிழக சட்டசபையானது, பிப்ரவரி 8 ஆம் தேதியன்று, ஆளுநர் R.N.ரவி அவர்களால் திருப்பி அனுப்பப் பட்ட நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) தேர்விற்கு எதிரான மசோதாவை ஒரு மனதாக மீண்டும் நிறைவேற்றி வரலாறு படைத்தது.
ஆளுநர் R.N.ரவி அவர்கள் சமீபத்தில், “தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை மசோதாவை” சட்டசபைக்குத் திருப்பி அனுப்பியிருந்தார்.
இது மோசமான (ஏழ்மையான) பொருளாதாரப் பின்னணியில் உள்ள மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்று அவர் கூறினார்.
தமிழக சட்டசபையானது, தனது 70 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, திருப்பி அனுப்பப்பட்ட ஒரு மசோதாவின் அதே வரைவு மசோதாவை திருத்தங்கள் இல்லாமல் ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றியுள்ளது.
தற்போது மீண்டும் அதே மசோதாவினை தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ளதால், தமிழக ஆளுநர் இரண்டாவது முறையாக இந்த மசோதாவினை நிராகரிக்க முடியாது.
ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியாக வேண்டும்.
இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அவசியமாகும்.