TNPSC Thervupettagam

நீதிபதி அரவிந்த் குமார் குழு

May 16 , 2026 16 days 87 0
  • நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களை நவீனமயமாக்குவதற்கான ஒரு செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்காக, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமைக்கப் போவதாக இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் அறிவித்துள்ளார்.
  • மேலும், இந்த நோக்கத்திற்காக 40 முதல் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசாங்க நிதி ஒதுக்கீட்டை இக்குழு பெறும்.
  • நீதித்துறை உள்கட்டமைப்பு ஆலோசனைக் குழு’ எனும் இக்குழு, அரசாங்கத்தின் கணிசமான நிதி உதவியுடன் நீதிமன்றங்களில் உள்ள உள்கட்டமைப்புக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்.
  • அமைப்பு ரீதியான தடைகளைக் கண்டறிதல், வழக்காடுபவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், மற்றும் வழக்குகளை விரைவாக முடித்து வைப்பதற்காக அதிநவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட ஏழு முக்கியப் பகுதிகளில் இது கவனம் செலுத்தும்.
  • மேலும், எண்ணிமப் பிளவைக் குறைப்பதற்கான மின்-நீதிமன்றங்கள் முன்முயற்சி மற்றும் 21 ஆம் நூற்றாண்டுக்காக வடிவமைக்கப்பட்ட நவீன நீதிமன்ற வளாகங்களின் கட்டுமானம் ஆகியவற்றிலும் இந்தக் குழு கவனம் செலுத்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்