TNPSC Thervupettagam

நீதிபதி கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை

September 10 , 2026 3 days 73 0
  • 2024 ஆம் ஆண்டில் நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விபத்து தொடர்பான நீதிபதி பி. கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கை 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
  • மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் புழக்கத்திற்கு வரக் காரணமான காவல்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், கள்ளச் சாராயத்தின் முக்கிய ஆதாரமாக அடையாளம் காணப்பட்ட கல்வராயன் மலைப் பகுதிக்கு தனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை உருவாக்கவும் பரிந்துரைத்துள்ளது.
  • இந்த துயரச் சம்பவத்தால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு கல்வி, உணவு மற்றும் இருப்பிடம் வழங்கவும், கல்வி முடித்த பின் அரசு வேலை வழங்கவும் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
  • வேலைவாய்ப்பை வழங்குவதற்காக கள்ளக்குறிச்சியில் தொழிற்சாலைகளை அமைக்கவும், கரியாலூர் காவல் நிலையத்தை தரம் உயர்த்தவும் பரிந்துரைத்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்