நீர் பாதுகாப்புத் திட்டத்தின் 2-வது பதிப்பு - குஜராத்
February 25 , 2019 2273 days 704 0
சுஜலாம் சுபலாம் ஜல் சஞ்சய் அபியான் என்ற குஜராத் மாநில முன்னெடுப்பின் இரண்டாவது பதிப்பினை குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி துவங்கி வைத்தார்.
பற்றாக்குறை நேரத்தில் பயன்படுத்துவதற்காக மழைநீர் சேமிப்பு வசதியை அதிகரிக்க பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அம்மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரிட இத்திட்டம் எண்ணுகின்றது.
இத்திட்டத்தின் முதல் பதிப்பு பல்வேறு நீர் ஆதாரங்களான குளங்கள், அணைகள், தடுப்பு அணைகள் மற்றும் இதர பகுதிகளில் ஏறக்குறைய 11000 லட்சம் கனமீட்டருக்கும் அதிகமான நீர்சேமிப்பு வசதியின் அதிகரிப்பைக் கண்டிருக்கின்றது.