முக்கிய மந்திரி யுவ சுவாபிமான் யோஜனா
February 26 , 2019
2272 days
695
- மத்தியப் பிரதேச அரசு தனது தனித்துவ திட்டமான முக்கிய மந்திரி யுவ சுவாபிமான் யோஜனாவை ஆரம்பித்து வைத்தது.
- இது ஒவ்வொரு வருடமும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த நகர்ப்புற இளைஞர்களுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பை உத்தரவாதப் படுத்துகின்றது.
- இளைஞர்கள் ஒவ்வொரு மாதமும் 4000 ரூபாய் உதவித் தொகையும், ஒட்டுமொத்த 100 நாட்களுக்கும் சேர்த்து 13,500 ரூபாய் தொகையும் வழங்கப்படுவர்.
- இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் அவர்கள் தனிச் சுதந்திரமுடையவர்களாக திகழ்வர்.
- இத்திட்டம் ஆண்டிற்கு 2 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானத்தை கொண்ட குடும்பங்களைப் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகத்தினர் என நிர்ணயம் செய்கின்றது.
- இது 21 முதல் 30 வயது கொண்ட இளைஞர்களுக்கு என்று கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றது.
Post Views:
695