TNPSC Thervupettagam

நீல சுதந்திர நடவடிக்கை - நிலை 2

August 23 , 2019 2174 days 719 0
  • சண்டிகர் பதிப்பின்  வெற்றியைத் தொடர்ந்து நீல சுதந்திர நடவடிக்கையின் தில்லிப் பதிப்பை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜீ மற்றும் இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான பாய்ச்சுங் பூட்டியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
  • நீலச் சுதந்திர நடவடிக்கை என்பது மாற்றுத் திறனாளிகள் மற்றும் தகுந்த உடல் திறன் உடையவர்கள் ஆகியோருக்கான நாடு தழுவிய தகவமைப்பு ஆழ்கடல் நீச்சல் திட்டமாகும்.
  • புகழ்பெற்ற சிறப்புப் படைகளான பாரா படைப் பிரிவு மற்றும் மார்க்கோஸ் (இந்தியக் கடற்படையின் சிறப்புக் காமண்டோப் படை) ஆகியவற்றிலிருந்து அனுபவம் பெற்ற 88 வீரர்களைக் கொண்ட குழுவானது வீரர்களுக்குப் பயிற்சியளித்தது.
  • இந்தத் திட்டமானது உயிர் பிழைத்தலுக்கான நுட்பங்கள், அவசர காலத்தின் முதலுதவி அளிக்கும் திறன்கள், ஆயுதமற்ற போர், சகிப்புத் தன்மை  மற்றும் சாகச ஆர்வலர்களுக்குப் பயிற்சி  அளிப்பதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

Image result for Op-Blue Freedom

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்