TNPSC Thervupettagam

நீல நிலவு மற்றும் குறுநிலவு

June 8 , 2026 6 days 88 0
  • 2026 ஆம் ஆண்டு மே 31 அன்று ஒரு அசாதாரணமான சந்திர நிகழ்வான அரிதான நீல நிலவு - குறுநிலவு நிகழ்வு காணப்பட்டது.  
  • ஒரே மாதத்தில் தோன்றும் இரண்டாவது முழு நிலவு (பௌர்ணமி) 'நீல நிலவு' என்று அழைக்கப்படுகிறது.
  • குறுநிலவு என்பது முழு நிலவானது பூமியிலிருந்து மிகத் தொலைவில் உள்ள புள்ளியான அபோஜியில் இருக்கும்போது நிகழ்கிறது.
  • குறுநிலவின் போது, நிலவு வழக்கமான முழு நிலவை விட சற்றுச் சிறியதாகவும் பிரகாசம் குறைவாகவும் தோன்றும்.
  • நீல நிலாக்கள் பொதுவாக இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கின்றன, இதனால் அவை ஒப்பீட்டளவில் அரிதானவை.
  • கடைசியாக நீல நிலவு – குறுநிலவு இணைவு 2020-ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் காணப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்