பத்து மாநிலங்களும் தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையமும் (NCDRC) ஜூலை மாதத்தில் 100 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குத் தீர்வு விகிதத்தை அடைந்தன.
NCDRC ஆனது 122% குறை தீர்வு வழங்கல் விகிதத்தைப் பதிவு செய்தது.
தமிழ்நாடு 277% உடன் முன்னிலை வகித்தது, அதைத் தொடர்ந்து இராஜஸ்தான் 214% மற்றும் தெலுங்கானா 158% விகிதங்களைக் கொண்டுள்ளன.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றில் தலா 150% என்ற விகிதமும், மேகாலயாவில் 140% என்ற விகிதமும் பதிவாகின.
இ-ஜாக்ரிதி தளம் தொடங்கப்பட்டதிலிருந்து, வெளிநாடுவாழ் இந்தியர்கள் உட்பட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் அதில் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு, இந்தத் தளத்தின் மூலம் 85,531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று நுகர்வோர் விவகாரத் துறையால் தொடங்கப் பட்ட இ-ஜாக்ரிதி தளம் ஆனது, குறை தீர்க்கும் கட்டமைப்பினை மேலும் பரிமாற்றியுள்ளது.