நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-க்குப் பதிலாக 2018 ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மசோதாவை சமீபத்தில் மக்களவை நிறைவேற்றியது.
இந்த மசோதாவானது நுகர்வோரின் உரிமைகளை அமல்படுத்தவும் சரக்கு மற்றும் சேவைகளில் உள்ள குறைபாடுகளுடன் தொடர்புடைய புகார்களைத் தீர்ப்பதற்கான ஒரு அமைப்பை வழங்கவும் முயல்கிறது.
நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின் படி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையமானது தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்படும்.
மாவட்ட ஆணையமானது ஒரு கோடி ரூபாய் வரை மதிப்புள்ள புகார்களை விசாரிக்கும். 1986ஆம் ஆண்டு சட்டத்தில் இதன் வரம்பு 20 லட்சங்களாகும்.
1 கோடி ரூபாயாக இருந்த மாநில ஆணையத்தின் உச்ச வரம்பு 15 கோடி ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
15 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள புகார்கள் தேசிய அளவிலான ஆணையத்தால் தீர்க்கப்படும்.