இந்தியா நெட்வொர்க் தயார்நிலை குறியீடு (NRI) 2025 இல் நான்கு இடங்கள் முன்னேறி 45வது இடத்தைப் பிடித்தது.
இக்குறியீடு போர்ச்சுலன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
குறைந்த-நடுத்தர வருமானப் பொருளாதாரங்களில் இந்தியா 2வது இடத்தைப் பிடித்தது.
தொலைத்தொடர்பு முதலீடு, செயற்கை நுண்ணறிவு (AI) வெளியீடுகள், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) சேவைகள் ஏற்றுமதி மற்றும் மின் வணிகச் சட்டம் ஆகியவற்றில் இந்தியா உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தொழில்நுட்பம், மக்கள், நிர்வாகம் மற்றும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் 127 பொருளாதாரங்களை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.