பசிபிக் தீவு நாடான நௌரு (Nauru), 2026 ஆம் ஆண்டு மே மாதம் அதன் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பிறகு, தனது பெயரை நவோரோ குடியரசு (Republic of Naoero) என அதிகாரப்பூர்வமாக மாற்றியது.
புதிய பெயரான நவோரோ என்பது தீவின் பூர்வீகப் பெயராகும், இது காலனித்துவ காலப் பெயரான நௌருவை மாற்றுகிறது.
நவோரோ மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனேசியாவில் அமைந்துள்ளதுடன் இது வாட்டிகன் சிட்டி மற்றும் மொனாக்கோவிற்குப் பிறகு உலகின் மூன்றாவது மிகச்சிறிய இறையாண்மை கொண்ட நாடாகும்.
இந்நாடு சுமார் 21 சதுர கிமீ பரப்பளவும், சுமார் 12,000 மக்கள் தொகையையும் கொண்டுள்ளதுடன் இது ஆஸ்திரேலிய நாட்டு டாலரை (AUD) அதன் நாணயமாகப் பயன்படுத்துகிறது.
பூர்வீக மொழியான டோரேரின் நவோரோ (நௌருவான் மொழி) யுனெஸ்கோவால் கடுமையாக அழிந்து வரும் மொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.