குஜராத்தின் வேராவலில் அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப் பட்ட கோளமீன் / பஃபர்ஃபிஷ் விஷமேற்றம் தொடர்பான முதல் பாதிப்பு பதிவாகியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
டெட்ராடோன் கட்குட்டியா எனும் (தற்போது லியோடோன் கட்குட்டியா என வகைப்படுத்தப் பட்டுள்ளது) நன்னீர் வாழ் பஃபர்ஃபிஷ், டெட்ரோடோடாக்சினை (TTX) கொண்டுள்ளது.
TTX என்பது கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மகாநதி போன்ற ஆறுகளில் காணப்படும் ஒரு சக்திவாய்ந்த நரம்பியல் நச்சு ஆகும்.
டெட்ரோடோடாக்சின் பஃபர்ஃபிஷ் திசுக்களில் வாழும் விப்ரியோ, சூடோமோனாஸ், ஏரோமோனாஸ் மற்றும் பேசிலஸ் போன்ற பாக்டீரியாக்களிலிருந்து தோன்றுவதாக நம்பப்படுகிறது.
இந்தியாவில் தற்போது நன்னீர் வாழ் மீன் நச்சு கண்காணிப்பு திட்டம் இல்லை, இது பொது விழிப்புணர்வையும் சரியான நேரத்தில் தடுப்பையும் அவசியமாக்குகிறது.
பஃபர்ஃபிஷ் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் முக்கியமானது என்றாலும், சுகாதார அபாயங்களைத் தடுக்கப் பாதுகாப்பான கையாளுதல் மற்றும் அது குறித்த கல்வி அவசியம் ஆகும்.