TNPSC Thervupettagam

உலகின் முதல் மலைகளின் பனி மாதிரிகள் களஞ்சியம்

January 22 , 2026 12 days 92 0
  • அண்டார்டிக் பீடபூமியில் உள்ள கான்கார்டியா ஆராய்ச்சி நிலையத்தில் உலகின் முதல் உலகளாவிய மலைகளின் பனி மாதிரிகள் களஞ்சியத்தை அறிவியலாளர்கள் திறந்து வைத்தனர்.
  • இந்த மையம் பனிக்கட்டி மாதிரிகள் சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது என்பதோடு இது பிரான்சு, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் குழுவான ஐஸ் மெமரி அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டது.
  • பனி மாதிரி காப்புப் பெட்டகம் என்பது சுருக்கப்பட்ட பனியில் உருவாக்கப்பட்ட ஒரு குகை என்பதோடு மேலும் இது நீண்ட காலமாகப் பனி மாதிரிகளைப் பாதுகாக்க -52 டிகிரி செல்சியஸில் பராமரிக்கப்படுகிறது.
  • முதல் பனி மாதிரிகள் பிரான்சில் உள்ள மோன்ட் பிளாங்க் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள கிராண்ட் காம்பின் மாசிஃப் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேல் அண்டார்டிகாவிற்கு கொண்டு செல்லப்பட்டன.
  • கடந்த கால காலநிலை, வாயுக்கள், தூசி மற்றும் மாசுபடுத்திகள் பற்றிய தகவல்களை வைத்திருப்பதுடன் பனி மாதிரிகள் வளிமண்டல நேர காப்புகளாக செயல் படுகின்றன.
  • 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பனிக்கட்டி மாதிரிகள் காப்புத் திட்டம், உலகெங்கிலும் உள்ள 10 பனிப்பாறைத் தளங்களிலிருந்து பனி மாதிரிகளை சேகரித்துள்ளது மற்றும் எதிர்கால ஆராய்ச்சிக்காக அதன் சேமிப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்