கடல்சார் நிபுணர்கள் குழுவொன்று, பசிபிக் பெருங்கடலின் தரைமட்டப் பகுதியில் மஞ்சள்நிற செங்கல் சாலை போன்ற அமைப்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
மஞ்சள்நிற செங்கற் சாலை கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பகுதியானது சுமார் ஆயிரக் கணக்கான மீட்டர் தூரம் கடலுக்கு அடியில் அமைந்திருந்தாலும் வறண்டநிலையில் காணப்பட்டது.
மஞ்சள்நிற செங்கற் சாலையானது உண்மையில் பண்டையக் காலத்திய, செயலில் உள்ள எரிமலையின் புவியியல் அமைப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
கடற்பரப்பில் படிந்த இந்தப் பல பாறைத் துண்டுகள், உயர் ஆற்றல் கொண்ட எரிமலை வெடிப்புகளில் இருந்து வெளியான எரிமலைப் பாறையாக இருக்கலாம்.