March 7 , 2026
14 hrs 0 min
11
- பசிபிக் பெருங்கடலின் சூரிய ஒளி ஊடுருவாத சுமார் 4,000 மீட்டர் கீழே " டார்க் ஆக்சிஜன் " இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இது சூரிய ஒளி இல்லாத ஆழ்கடல் பகுதிகளில் காணப்படும் ஆக்ஸிஜனைக் குறிக்கிறது.
- இந்தக் கண்டுபிடிப்பு பசிபிக் பெருங்கடலில் உள்ள கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலத்தில் நிகழ்த்தப்பட்டது.
- கடல் தளத்தில் உள்ள பல்லுலோக முடிச்சுகளுக்கு அருகில் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதை அறிவியலாளர்கள் கவனித்தனர்.
- இந்தப் பல்லுலோக முடிச்சுகளில் மாங்கனீசு, நிக்கல் மற்றும் கோபால்ட் போன்ற உலோகங்கள் உள்ளன.
- ஆக்சிஜன் ஒளிச்சேர்க்கை மூலம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது என்ற நீண்ட கால அறிவியல் கருத்தை இந்தக் கண்டுபிடிப்பு சவாலுக்கு உட்படுத்துகிறது.
Post Views:
11