தியான்வென்-1 திட்டத்தின் ஒரு பகுதியான சீனாவின் ஜுரோங் உலவியானது, செவ்வாய் கிரகத்தில் பண்டைய கடற்கரைகள் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்தது.
செவ்வாய் கிரகத்தின் ஒரு பெரிய வடக்குப் படுகையான உட்டோபியா பிளானிட்டியாவில் இந்த உலவி இயங்குகிறது.
தரையில் ஊடுருவும் ரேடார் ஆனது மேற்பரப்பிலிருந்து பல மீட்டர் கீழே கடலோர படிவுகளை ஒத்த புதைக்கப்பட்ட வண்டல் அடுக்குகளைக் கண்டறிந்தது.
இந்த நிலவியல் அமைப்புகள் சுமார் 3.5 முதல் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, பிற்கால ஹெஸ்பெரியன் காலத்தைச் சேர்ந்தவை.
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் 'டியூட்டிரோனிலஸ் கடல்' என்று அழைக்கப்படும் நீண்ட காலம் நிலைத்திருந்த ஒரு பெருங்கடல் இருந்திருக்கலாம் என்பதை உணர்த்துகின்றன.
பண்டைய செவ்வாய் கிரகம் வெப்பமான காலநிலையும், நிலையான திரவ நீரையும் கொண்டிருந்திருக்கலாம்; இது அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கியிருக்கக் கூடும்.