நார்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவும் நார்வேயும் தங்களது உறவை 'பசுமை உத்திசார் கூட்டாண்மையாக' மேம்படுத்திக் கொண்டன.
இந்தப் பேச்சுவார்த்தையானது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் ஆகியோருக்கிடையே நடைபெற்றது.
இக்கூட்டாண்மையானது தூய்மையான எரிசக்தி, பசுமை கப்பல் போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் சுகாதாரம், விண்வெளி ஒத்துழைப்பு மற்றும் நீலப் பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இந்தியாவின் 'இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பில்' நார்வே இணைந்தது. மேலும், நார்வே விண்வெளி நிறுவனத்துடன் இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
குஜராத்தின் கல்பசார் திட்டம் மற்றும் பசுமை கடல்சார் மேம்பாட்டிற்கான தொழில் நுட்ப ஒத்துழைப்புக்கும் இந்தியாவும் நார்வேயும் ஒப்புக் கொண்டன.