பசுமை மற்றும் நீடித்த மேம்பாட்டிற்கான இந்திய- ஜெர்மானியக் கூட்டாண்மை
May 8 , 2022 1092 days 455 0
நரேந்திர மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் பசுமை மற்றும் நீடித்த மேம்பாட்டுக் கூட்டாண்மையை நிறுவுவதற்கான கூட்டு நோக்க (JDI) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இது இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதையும், பருவ நிலையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கூட்டாண்மையின் கீழ், இந்தியாவில் பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களில் 10 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்வதற்கான தனது உறுதிப் பாட்டினை ஜெர்மனி வழங்கியது.