TNPSC Thervupettagam

பசுமை விமான நிலையங்கள் அங்கீகாரம் 2025

May 4 , 2025 86 days 168 0
  • நீடித்த நிலையான எரிசக்தி மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்காக என ஆசிய-பசிபிக் மற்றும் மத்தியக் கிழக்குப் பிராந்தியங்களைச் சேர்ந்த பன்னிரண்டு விமான நிலையங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.
  • இந்தப் பட்டியலில் மூன்று இந்திய விமான நிலையங்களும் இடம் பெற்றுள்ளன.
  • கண்ணூரில் உள்ள பையனூரில் நிலப்பரப்பு அடிப்படையிலான சூரிய மின் நிலையம் அமைத்ததற்காக இவ்விருதைக் கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் (CIAL) பெற்றுள்ளது.
  • கர்நாடகாவில் உள்ள ஹூப்ளி விமான நிலையத்திற்கு பிளாட்டினம் அங்கீகாரமானது  வழங்கப் பட்டுள்ளது.
  • பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையமானது ஆண்டிற்கு 15-38 மில்லியன் இடையிலான பயணிகளைக் கையாளும் நிலையம் பிரிவில் வெள்ளி அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்