April 22 , 2026
7 days
61
- ஜாகத் ஜோத் ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் சத்கார் (திருத்த) மசோதா, 2026க்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- இந்த மசோதா 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- இது ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பை அவமதிப்பதை கடுமையான சட்டக் கட்டமைப்பின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக்குகிறது.
- இத்தகையக் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹25 லட்சம் வரை அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை இது வழங்குகிறது.
- இந்தச் சட்டம் முந்தைய ஜாகத் ஜோத் ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் சத்கார் சட்டம், 2008-ஐ வலுப்படுத்துகிறது.
- அவமதிப்புச் சம்பவங்களைத் தடுப்பதையும், ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் சமய புனிதத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
61