TNPSC Thervupettagam

பஞ்சாயத்து அமைப்புகளின் முன்னேற்றக் குறியீடு 2.0

May 2 , 2026 15 hrs 0 min 51 0
  • ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மதிப்பிடுவதற்காக 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பஞ்சாயத்து அமைப்புகளின் முன்னேற்றக் குறியீடு (PAI) 2.0-ஐ பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டது.
  • PAI என்பது நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs) இணைக்கப்பட்ட குறிக்கோள் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி கிராம பஞ்சாயத்துகளின் முன்னேற்றத்தை அளவிடுவதற்கான ஒரு தேசிய அளவிலான கட்டமைப்பாகும்.
  • இது அடிமட்ட அளவிலான கண்காணிப்புக்காக 17 SDG-களை 9 உள்ளூர் மயமாக்கப் பட்ட நிலையான வளர்ச்சி இலக்கு (LSDG) கருத்துருக்களாக மாற்றுகிறது.
  • PAI 2.0 சுகாதாரம், நீர் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் 150-க்கும் மேற்பட்ட குறிகாட்டிகள் மற்றும் 230 தரவுப் புள்ளிகளைப் பயன்படுத்தி 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளை மதிப்பீடு செய்கிறது.
  • இது மதிப்பெண்களின் (0-100 அளவுகோல்) அடிப்படையில் பஞ்சாயத்து அமைப்புகளை சாதனை படித்தவை, முன்னணியில் இருப்பவை, செயல்திறன் மிக்கவை, இலட்சியம் மிக்கவை மற்றும் தொடக்கநிலையில் உள்ளவை என ஐந்து வகைகளாக வகைப்படுத்துகிறது.
  • இதில் சுமார் 97.3% பங்கேற்பு பதிவாகியுள்ளது, 2.59 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் மதிப்பிடப்பட்டன, அவற்றில் 3,635 பஞ்சாயத்து அமைப்புகள் முன்னணியில் இருப்பவையாக உருவெடுத்துள்ளன.
  • சுமார் 45.7% பஞ்சாயத்து அமைப்புகள் “செயல்திறன் மிக்கவை” (Performer) என்ற பிரிவில் உள்ளன; எந்தவொரு பஞ்சாயத்து அமைப்பும் ஒட்டு மொத்தமாக A+ (சாதனை படித்தவை) தரத்தை எட்டவில்லை; மேலும் திரிபுரா, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாகத் திகழ்கின்றன.
  • இந்தக் குறியீடு தரவு உந்துதல் ஆளுகையை ஆதரிக்கிறது, கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களை (GPDPs) தயாரிக்க உதவுகிறது மற்றும் வெளிப்படையான, பங்கேற்பு ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்