2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் அறிக்கை
May 2 , 2026 15 hrs 0 min 43 0
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் அறிக்கையின் 27-வது பதிப்பை வெளியிட்டது.
1995 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படும் ஒரு ஆண்டு அறிக்கையான இது சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் மற்றும் மக்கள் தொகை ஆகியவற்றின் சமூக-பொருளாதார நிலையை உள்ளடக்கியது.
பிறப்பு பாலின விகிதம் 917 ஆக (2021–23) மேம்பட்டுள்ளது, மேலும் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
பள்ளிக் கல்வியில் பாலினச் சமத்துவம் எட்டப்பட்டுள்ளது, மேலும் பெண்களின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (GER) 30.2 ஆக அதிகரித்துள்ளது.
பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு, குறிப்பாக கிராமப்புறப் பெண்களிடையே, 37.5% லிருந்து 45.9% ஆக உயர்ந்துள்ளது, மேலும் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
இருப்பினும் 14.4% எழுத்தறிவு இடைவெளி, குறைந்த அளவிலான புற்றுநோய் பரிசோதனை (1.7%) மற்றும் ஊதியம் இல்லாத வேலைகளின் அதிக சுமை போன்ற சிக்கல்கள் இன்னமும் தொடர்கின்றன.