இமாச்சலப் பிரதேசத்தின் பஞ்சாரில் சமூக வன வள (CFR) உரிமைகளை அங்கீகரித்தது என்பது வன உரிமைகள் சட்டம், 2006 இன் செயல்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
வன உரிமைகள் சட்டம், 2006 ஆனது காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளின் உரிமைகளை அங்கீகரிக்கிறது.
அரசாங்க மற்றும் அறிவியல் ஆதரவுடன் கிராம சபைகள் சமூக வன வள மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்.
இந்தத் திட்டங்கள் காடுகள், பல்லுயிர் மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதோடு நிலையான வாழ்வாதாரங்கள் மற்றும் பருவநிலை பின்னடைவுத் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
வன நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் முடிவெடுத்தல் ஆகியவற்றில் பெண்களும் இளைஞர்களும் பங்கேற்க வேண்டும்.
காடுகளின் ஆரோக்கியம், நீர் பாதுகாப்பு, மேம்பட்ட வாழ்வாதாரங்கள் மற்றும் வலுவான உள்ளூர் நிறுவனங்கள் மூலம் முன்னேற்றம் அளவிடப்பட வேண்டும்.