பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர்
March 21 , 2021 1636 days 846 0
மத்திய அரசானது ஹர்ஷ் சவுகானை பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளது.
இந்த ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூன்று ஆண்டு கால பதவிக் காலத்திற்குக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த ஆணையத்தின் தலைவர் மத்திய காபினெட் அமைச்சரவை தகுதியைச் சேர்ந்தவர் எனும் தகுதியுடையவர் ஆவார். மேலும் இந்த ஆணையத்தில் துணைத் தலைவர் இணை அமைச்சர் எனும் தகுதி உடையவர் ஆவார்.
89வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2003 என்பதின் மூலம் சரத்து 338-Bஎன்ற சரத்தின் கீழ் இந்த ஆணையம் நிறுவப் பட்டு இருக்கின்றது.