மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது 2021 ஆம் ஆண்டின் மார்ச் 16 முதல் மார்ச் 31 வரை போஷன் பக்வாடா என்ற பிரச்சாரத்தினைக் வினை கடைபிடிக்கிறது.
போஷன் பக்வாடா தொடர்பான விவகாரங்களைக் கண்காணிப்பதற்கான ஒரு முதன்மைத் துறையாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (அ) சமூக நலத்துறை செயல்படும்.
இது அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் கடைப்பிடிக்கப் படுகிறது.
உணவுப் பொருட்கள் வழங்கும் காடுகளை (Food Forestry) பயன்படுத்தி ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதும், போஷன் பஞ்சாயத்துகளை அமைப்பதும் பக்வாடாவின் முதன்மை நோக்கமாகும்.
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருத்துவ குணமிக்க தாவரங்கள் வாரியமானது ஒவ்வோர் அங்கன்வாடி நிலையங்களுக்கும் மருத்துவ குணமிக்க 4 தாவரச் செடிகளை வழங்கும்.