பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சகமானது, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) கீழ் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (ToT) என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியது.
பஞ்சாயத்துகளுக்காக என சொந்த ஆதார வருவாயை (OSR) உருவாக்கும் ஒரு திறனை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது.
இந்தத் திட்டம் ஆனது இராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் அபியான் (RGSA) திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படுகிறது.
அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் (IIM) இணைந்து இது நடத்தப்படும்.
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் மீதான நிதி சார் அதிகாரமளிப்பு மூலம் அடித்தட்டு நிலையிலான நிர்வாகத்தினை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.