11,440 கோடி ரூபாய் மொத்த செலவில் பருப்பு வகைகளில் தன்னிறைவு பெறச் செய்வதற்கான ஆறு ஆண்டு காலத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
2030–31 ஆம் ஆண்டிற்குள் 350 லட்சம் டன் பருப்பு வகைகளை உற்பத்தி செய்து 310 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருப்பு உற்பத்தியினை பரப்புவதே இத்திட்டத்தின் இலக்காகும்.
பிரதான் மந்திரி அன்னதாதா ஆய் சன்ரக்சன் அபியான் (PM-AASHA) திட்டத்தின் விலை ஆதரவு திட்டத்தின் (PSS) கீழ் துவரை பருப்பு, உளுந்து மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் முழு கொள்முதல் ஆனது மேற்கொள்ளப்படும்.
மொத்தம் 126 லட்சம் குவிண்டால் அளவிலான சான்றளிக்கப்பட்ட விதைகளும் 88 லட்சம் இலவச விதைப் பெட்டிகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
ஓர் அலகிற்கு 25 லட்சம் ரூபாய் வரையிலான மானியத்துடன் 1000 அறுவடைக்குப் பிந்தைய பதப்படுத்துதல்/செயலாக்க அலகுகள் நிறுவப்படும்.