11,440 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பருப்பு வகைகளில் தன்னிறைவு அடைவதற்கான (ஆத்மநிர்பாரத்) திட்டத்தினை (2025–26 முதல் 2030–31 ஆம் ஆண்டு வரை) பிரதமர் தொடங்கி வைத்தார்.
2030–31 ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டு பருப்பு உற்பத்தியை 350 லட்சம் டன்களாகவும், பருப்புகளின் சாகுபடிப் பரப்பளவை 310 லட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) துவரம் பருப்பு (அர்ஹார்), உளுந்து மற்றும் மசூர் பருப்பு வகைகளை 100 சதவீதம் கொள்முதல் செய்வதை இது உறுதி செய்கிறது.
விவசாயிகளுக்கு 88 லட்சம் இலவச விதை தொகுப்புகள் மற்றும் 126 லட்சம் குவிண்டால் அளவிலான சான்றளிக்கப்பட்ட விதைகளை விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.