நிதி ஆயோக் அமைப்பானது, "Strategies and Pathways for Accelerating Growth in Pulses towards the Goal of Atmanirbharta/ஆத்மநிர்பாரதா இலக்கை நோக்கி பருப்பு வகைகள் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் மற்றும் பாதைகள்" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா முழுவதும் 885 விவசாயிகளின் கள ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.
இந்தியா பருப்பு வகைகளை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய நாடாகவும், நுகர்வோராகவும் உள்ளது என்பதோடு உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான முறையிலான விவசாயத்திற்கு இது மிகவும் முக்கியமானதாகும்.
2015–16 ஆம் ஆண்டில் 16.35 மில்லியன் டன்னாக இருந்த பருப்பு உற்பத்தியானது, 2022–23 ஆம் ஆண்டில் 26.06 மில்லியன் டன்னாக உயர்ந்தது என்பதோடு இது இறக்குமதியின் சார்ந்திருக்கும் நிலையினை 29 சதவீதத்திலிருந்து 10.4% ஆகக் குறைந்தது.
2025–26 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி ஒதுக்கீட்டில் துவரம் பருப்பு, உளுந்து மற்றும் பயறு வகைகளில் கவனம் செலுத்தி, பருப்பு வகைகளில் தன்னிறைவு பெற்ற இந்தியாவிற்கான/ஆத்மநிர்பாரதத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையானது, 2030 ஆம் ஆண்டில் பருப்பு உற்பத்தி 30.59 மில்லியன் டன்னையும் 2047 ஆம் ஆண்டில் 45.79 மில்லியன் டன்னையும் எட்டும் என்று கணித்து உள்ளது.
முழுமையாகப் பயன்படுத்தப்படாத நிலங்களைப் பயன்படுத்தி கிடைமட்ட விரிவாக்கம் மற்றும் விளைச்சல் மற்றும் வேளாண் நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் செங்குத்து விரிவாக்கம் ஆகியவை இந்த உத்தியில் அடங்கும்.
மாவட்ட வாரியான தொகுதியாக்கம், உயர்தர விதைகளை ஏற்றல் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட "ஒரு தொகுதி-ஒரு விதை கிராமம்" மையங்களை இது பரிந்துரைக்கிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் பருப்பு வகைகளின் உள்நாட்டு விநியோகத்தினை 48.44 மில்லியன் டன்னாகவும், 2047 ஆம் ஆண்டுக்குள் 63.64 மில்லியன் டன்னாகவும் அதிகரிப்பதே இதன் இலக்காகும்.