தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கான பருவநிலை நடவடிக்கை கண்காணிப்பு மற்றும் பருவநிலை கார்பன் நீக்க நடவடிக்கை செயல்பாடுகளைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம், விருதுநகர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வசுதா அறக்கட்டளையின் ஆதரவுடன் பகுப்பாய்வு செய்யப் பட்டுள்ளன.
மாவட்ட அளவிலான செயல் திட்டங்கள் மூலம் நிகர சுழிய அளவிலான உமிழ்வை அடைவதை நோக்கி மாநிலத்தை வழி நடத்துவதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் ஆகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு சற்றேறக்குறைய 10 ஜிகாவாட் (GW) புதுப்பிக்கத் தக்க ஆற்றலை புதிதாக உற்பத்தி செய்துள்ளது.
மாநிலத்தின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் சுமார் 60 சதவீதம் தற்போது புதுப்பிக்கத் தக்க மூலங்களிலிருந்து பெறப்படுகிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் கோயம்புத்தூரில் 500 நகர பேருந்துகளை மின்மயமாக்குவதும், ஐந்து லட்சம் தெரு விளக்குகளுக்கு மாற்றாக ஒளி உமிழும் டையோடு (LED) விளக்குகளைப் பொருத்துவதும் இந்தத் திட்டங்களில் அடங்கும்.