பருவநிலை மாற்றம்: பசுமை இல்ல வாயு, கடல் மட்ட உயர்வு
May 22 , 2022 1277 days 586 0
நான்கு முக்கியப் பருவநிலை மாற்ற குறிகாட்டிகளில் புதிய உயர்வை எட்டியுள்ளன.
பசுமை இல்ல வாயுச் செறிவுகள், கடல் மட்ட உயர்வு, கடல் வெப்பம் மற்றும் கடல் அமில மயமாக்கல் ஆகியவற்றில் புதிய உயர்வை எட்டியுள்ளன.
கோவிட்-19 பெருந்தொற்று காலப் பொது முடக்கமானது வளிமண்டலப் பசுமை இல்ல வாயுக்களின் செறிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
உலகளாவியச் சராசரி கடல் மட்டமானது, 2013 முதல் 2021 வரையில் ஓர் ஆண்டிற்கு சராசரியாக 4.5 மில்லி மீட்டர்கள் உயர்ந்து 2021 ஆம் ஆண்டில் ஒரு புதிய உச்சத்தை எட்டியது.
இது 1993 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஓர் ஆண்டிற்குச் சராசரியாக 2.1 மில்லி மீட்டர் உயர்ந்த அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.