TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றம் மீதான பேசிக் (BASIC) நாடுகளின் அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு

November 23 , 2018 2449 days 813 0
  • பருவநிலை மாற்றம் மீதான பேசிக் (BASIC) நாடுகளின் அமைச்சர்களுக்கிடையேயான 27-வது சந்திப்பு புது தில்லியில் நடைபெற்றது.
  • இது பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான பாரீஸ் ஒப்பந்தத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு வளரும் நாடுகளுக்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் ஆதரவு அளிப்பதை வலியுறுத்துகிறது.
  • 2018 ஆம் ஆண்டின் டிசம்பரில் போலந்தின் கோட்டாவைசில் ஐ.நா. உறுப்பினர்கள் மாநாடு (COP - Conference of Parties) நடைபெறவிருக்கும் நிலையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
  • 2019 ஆம் ஆண்டில் பேசிக் நாடுகளின் அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பை பிரேசில் நடத்தவிருக்கிறது.
  • பேசிக் நாடுகளானது பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 4 பெரிய புதிதாக தொழில்மயமான நாடுகளின் கூட்டணியாகும். இது 2009 ஆம் ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்