பல வழிப்பாதை கொண்ட தடுப்பிலா போக்குவரத்து சுங்கக் கட்டண முறை
December 25 , 2025 17 days 123 0
2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா முழுவதும் பல வழிப்பாதை கொண்ட தடுப்பிலா போக்குவரத்து சுங்கக் கட்டண முறையை (MLFF) செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்தாமல் சுங்கச்சாவடிகளைக் கடக்க அனுமதிக்கும் இந்த முறையின் மூலம், காத்திருப்பு நேரம் பூஜ்ஜிய நிமிடங்களாகக் குறையும்.
இதனால் வாகனங்கள் மணிக்கு 80 கிமீ வேகத்தில் சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியும்.
MLFF செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான எண் தகடு அங்கீகாரம், செயற்கைக் கோள் கண்காணிப்பு மற்றும் FASTag ஒருங்கிணைப்பு அமைப்பைப் பயன்படுத்தும்.
இந்த முன்னெடுப்பு ஆனது, போக்குவரத்து இயக்கத்தினை மேம்படுத்துதல், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் சுங்க வசூலில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.