TNPSC Thervupettagam

பலவழிப் பாதை கொண்ட தடுப்பிலா போக்குவரத்து சுங்கக் கட்டண முறை

September 5 , 2025 17 days 49 0
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது குஜராத்தில் உள்ள NH-48 சாலையில் உள்ள சோரியாசி கட்டணச் சாவடியில் முதல் பல வழிப்பாதை கொண்ட தடுப்பில்லா போக்குவரத்துக் கட்டண (MLFF) முறையைத் தொடங்கியது.
  • NHAI ஆணையத்தின் கீழ் உள்ள இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (IHMCL) ஆனது, MLFF முறையை செயல்படுத்துவதற்காக ICICI வங்கியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • ஹரியானாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-44யில் (NH-44) உள்ள கரௌண்டா கட்டணச் சாவடியில் மற்றொரு MLFF அமைப்பு விரைவில் செயல்படுத்தப்படும்.
  • நடப்பு நிதியாண்டில் இந்தியா முழுவதும் சுமார் 25 MLFF அடிப்படையிலான சுங்கச் சாவடிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
  • MLFF, RFID ரீடர்கள் கருவிகள் மற்றும் தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) கொண்ட ஒளிப்படக் கருவிகள் மூலம் FASTag மற்றும் வாகனப் பதிவு எண் (VRN) அங்கீகாரத்தைப் பயன்படுத்தி தடையற்ற கட்டண வசூலை செயல்படுத்துகிறது.
  • MLFF செயல்படுத்தல், சுங்க வருவாய் வசூலை மேம்படுத்துவதையும், சிறந்த மற்றும் திறம் மிக்க தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்