TNPSC Thervupettagam
May 18 , 2025 2 days 29 0
  • பால்வெளி அண்டத்தின், அண்ட இழையில் ஒரு மாபெரும் பிளவு/முறிவை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • சந்திரா கலத்திலிருந்துப் பெறப்பட்ட ஊடு கதிர் தரவு மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள MeerKAT ரேடியோ தொகுப்பு ஆய்வகத்திலிருந்து பெறப்பட்ட ரேடியோ தரவுகள் ஆகியவை, நாசா அமைப்பினால் G359.13 என அழைக்கப்படும் அண்ட இழைகளைக் காட்டுகின்றன.
  • மணிக்கு ஒரு மில்லியன் முதல் இரண்டு மில்லியன் மைல்கள் வரையிலான வேகத்தில் G359.13 இழையில் மோதிய துடிப்பண்டத்தினால் இந்த முறிவு ஏற்பட்டிருக்கலாம்.
  • சுமார் 230 ஒளி ஆண்டுகள் நீளமுள்ள, G359.13 ஆனது பால்வெளி அண்டத்தில் உள்ள இந்தக் கட்டமைப்புகளில் மிக நீளமான மற்றும் பிரகாசமான ஒன்றாகும்.
  • G359.13 ஆனது புவியிலிருந்து சுமார் 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில், பால்வெளி அண்டத்தின் மையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்