TNPSC Thervupettagam

பல்நாளமில்லாச் சுரப்பி வளர்சிதை மாற்றக் கருப்பை நோய்க்குறி – PMOS

May 18 , 2026 14 days 98 0
  • பல்கட்டி கருப்பை நோய்க்குறி (PCOS) என்பதன் உயிரியல் சிக்கலைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில், ஒரு சர்வதேசக் குழு அதற்கு ‘பல்நாளமில்லாச் சுரப்பி வளர்சிதை மாற்றக் கருப்பை நோய்க்குறி' (PMOS) என மறுபெயரிட்டுள்ளது.
  • முந்தைய சொல்லான PCOS என்பது தவறாக வழிநடத்துவதாகக் கருதப்பட்டது, ஏனெனில் பல நோயாளிகளுக்கு உண்மையான சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பதில்லை; அவை உண்மையில் முதிர்ச்சியடையாத நுண்ணறைகளே (immature follicles) ஆகும்.
  • புதிய சொல்லான PMOS ஆனது இன்சுலின், ஆண்ட்ரோஜன், லூட்டினைசிங் ஹார்மோன் (LH) மற்றும் நுண்ணறை-தூண்டும் ஹார்மோன் (FSH) உள்ளிட்ட பல ஹார்மோன் அமைப்புகளை முன்னிலைப்படுத்துகிறது.
  • இது வளர்சிதை மாற்றக் குறைபாட்டை மையமாகக் கொண்டு, இந்நிலையை இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு நோய், உடல் பருமன், கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் இருதயப் பாதிப்பு அபாயங்களுடன் இணைக்கிறது.
  • ஆய்வுகளின்படி, இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் (சாதாரண உடல் எடை கொண்ட "ஒல்லியான PMOS" உடையவர்கள் உட்பட) கிட்டத்தட்ட 70-80% பேருக்கு இன்சுலின் எதிர்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்