தமிழ்நாடு மாநிலமானது பல்லடுக்குச் சேர்மத்திலான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) வாயுக் கொள்கலன்/சிலிண்டர்களின் இணைப்புகள் (Composite cylinder) வழங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் மூலம் சுமார் 1.06 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதே காலக் கட்டத்தில் கர்நாடகா சுமார் 60,000 இணைப்புகளை விற்பனை செய்து உள்ளது.
இது உட்செலுத்து ஊது முறையில் வார்க்கப்பட்டு, உள் பூச்சு பூசப்பட்ட, பலபடிச் சேர்ம கண்ணாடி இழையினால் ஆன மேலடுக்கினைக் கொண்ட மூன்று அடுக்கு சிலிண்டர் ஆகும்.
இந்த சிலிண்டர் ஆனது இலகுரக வகையில் மற்றும் துருப்பிடிக்காத மற்றும் தீப்பற்றல் ஏற்பட்டால் வெடிக்காத வகையிலானதாகும்.