பழங்குடியின கிராமங்களுக்கான தொலைநோக்குத் திட்டம் 2030 அறிவிப்பு
October 7 , 2025 12 days 55 0
பழங்குடியின கிராமங்களுக்கான தொலைநோக்குத் திட்டம் 2030 அறிவிப்பு ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதியன்று சிறப்பு கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்டது.
உலகின் மிகப்பெரியப் பழங்குடியின அடிமட்ட தலைமைத்துவத் திட்டமான ஆதி கர்மயோகி அபியான் திட்டத்தினை பழங்குடியின விவகார அமைச்சகம் தொடங்கி உள்ளது.
இந்தத் திட்டம் ஆனது, 30 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 1 லட்சம் கிராமங்கள் மற்றும் தோலாக்களில் 11.5 கோடிக்கும் மேற்பட்ட பழங்குடியினக் குடிமக்களை சென்றடைந்தது.
கிராமவாசிகளிடமிருந்து பெறப்படும் வாராந்திர தன்னார்வ சேவையுடன் ஒரு லட்சம் ஆதி சேவா மையங்கள் அல்லது குடிமக்கள் சேவை மையங்கள் நிறுவப்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஆதி வாணி செயலி, பழங்குடியின சமூகங்களை அவர்களது தாய்மொழிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைக்கிறது, இதன் மூலம் நிகழ்நேர தகவல் தொடர்பு கிடைக்கப்பெறும்.
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், 20 லட்சம் அதிகாரிகள், சுயஉதவிக்குழுப் பெண்கள் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அரசுத் திட்டங்களை கடை நிலை வரை வழங்குவதை உறுதி செய்வதற்காக ஆதி கர்மயோகிகளாகப் பயிற்சி பெற்றுள்ளனர்.