TNPSC Thervupettagam

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்

April 26 , 2025 4 days 71 0
  • ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் (பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள்) கொல்லப்பட்டனர்.
  • பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
  • இந்தச் சம்பவத்திற்குப் பதில் நடவடிக்கை எடுக்கும் விதமாக, பாகிஸ்தானுடனான பல தசாப்த காலத்திய சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது.
  • இதன் மூலம், சிந்து நதி மற்றும் ஜீலம், செனாப், ராவி, பியஸ் மற்றும் சட்லஜ் ஆகிய அதன் கிளை நதிகளிலிருந்து நீர் வழங்கீடு நிறுத்தப்படும்.
  • இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஆனது 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியன்று கையெழுத்தானது.
  • உலக வங்கியினால் இடையீடு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் ஆனது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தம் ஆனது 1965, 1971 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற மூன்று முக்கியப் போர்களைக் கடந்தும் நடைமுறையில் இருந்தது ஆனால் தற்போது இது காலவரையின்றி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
  • ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியான அட்டாரி-வாகா எல்லையானது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மூடப்பட்டது.
  • புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில்/உயர் ஆணையத்தில் உள்ள கடற் படை மற்றும் விமானப் படை ஆலோசகர்கள் போன்றப் பாதுகாப்பு அல்லது இராணுவ அதிகாரிகளை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் இருந்து இந்தியா கடற்படை, விமானப் படை போன்ற தனது பாதுகாப்பு ஆலோசகர்களைத் திரும்ப அழைத்துள்ளது.
  • இங்கு உயர் ஆணையங்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையானது மேலும் குறைக்கப் படுவதன் மூலம், தற்போதைய 55 எண்ணிக்கையிலிருந்து 30 ஆகக் குறைக்கப்படும் என்பதோடு இது 2025 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதிக்குள் நடைமுறைக்கு வரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்