அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research – CSIR) தேசிய இயற்பியல் ஆய்வகமானது இரு நிறங்களில் ஒளிரும் பாதுகாப்பு மை ஒன்றை உருவாக்கியுள்ளது. இது சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் ஒளிரும் திறன் கொண்டது.
உருவாக்கப்பட்ட இந்த மை ஆனது கள்ள ரூபாய் நோட்டுகளைத் தடுக்க உதவும்.
கடவுச்சீட்டு, அரசாங்க ஆவணங்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றின் நம்பகத் தன்மையை சரிபார்க்க இந்த மையைப் பயன்படுத்தலாம்.